ஐரோப்பிய ஆணையத்தின் இணை ஆராய்ச்சி மையத்தினால் (European Commission Joint Research Centre) தயாரிக்கப்பட்ட உலக மண் பல்லுயிர்ப் பெருக்க நிலப்பட ஏட்டின்படி, இந்தியாவின் மண் பல்லுயிர்ப் பெருக்கம் அபாய கட்டத்தில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இது பாகிஸ்தான், சீனா, ஆப்பிரிக்காவில் உள்ள பல நாடுகள், ஐரோப்பிய நாடுகள், பெரும்பாலான வட அமெரிக்க நாடுகள், இந்தியா ஆகிய நாடுகளில் மண் பல்லுயிர்ப் பெருக்கம் மிக அதிக அளவில் அபாயக் கட்டத்தில் உள்ளதைக் காட்டுகிறது.
இயற்கை வளம் மற்றும் விவசாயம் ஆகியவற்றை மிக அதிக அளவில் சுரண்டுதல் பல்லுயிர்ப் பெருக்க அழிவிற்கான முக்கியக் காரணிகள் ஆகும்.
மேலும் இது இந்தியாவின் தனிநபர் சூழலியல் தடமானது 1.75 ஹெக்டேர்கள் / தனிநபர் என்பதை விட குறைவாக, அதாவது ஆராயப்பட்ட நாடுகளில் இதுவே மோசமான அளவாக உள்ளது எனவும் இந்தியாவின் அதிக மக்கட்தொகையானது சுற்றுச்சூழல் பிரச்சனையால் அதிக பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்பதையும் காட்டுகிறது.
உலகத்திற்கான அபாயக் குறியீடானது நிலத்தில் உள்ள பன்முகத் தன்மையின் இழப்பு, மாசுபாடுகள், அதிகப்படியான ஊட்டச்சத்து, மிகை மேய்ச்சல், தீவிர விவசாயம், தீ, மண் அரிப்பு, பாலைவனமாக்கல் மற்றும் பருவநிலை மாற்றம் ஆகியவற்றின் மூலம் பிரச்சினைகள் ஏற்படுவதைக் குறிக்கிறது.
இது ஆண்டுக்கு இருமுறை வெளியிடப்படும் 2018 ஆம் ஆண்டிற்கான வாழும் கிரகத்திற்கான அறிக்கையின் (Living Planet Report 2018) ஒரு பகுதியாகும்.