TNPSC Thervupettagam

உலக மண் பல்லுயிர்ப் பெருக்க நிலப்பட ஏடு (ATLAS)

November 3 , 2018 2085 days 701 0
  • ஐரோப்பிய ஆணையத்தின் இணை ஆராய்ச்சி மையத்தினால் (European Commission Joint Research Centre) தயாரிக்கப்பட்ட உலக மண் பல்லுயிர்ப் பெருக்க நிலப்பட ஏட்டின்படி, இந்தியாவின் மண் பல்லுயிர்ப் பெருக்கம் அபாய கட்டத்தில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
  • இது பாகிஸ்தான், சீனா, ஆப்பிரிக்காவில் உள்ள பல நாடுகள், ஐரோப்பிய நாடுகள், பெரும்பாலான வட அமெரிக்க நாடுகள், இந்தியா ஆகிய நாடுகளில் மண் பல்லுயிர்ப் பெருக்கம் மிக அதிக அளவில் அபாயக் கட்டத்தில் உள்ளதைக் காட்டுகிறது.
  • இயற்கை வளம் மற்றும் விவசாயம் ஆகியவற்றை மிக அதிக அளவில் சுரண்டுதல் பல்லுயிர்ப் பெருக்க அழிவிற்கான முக்கியக் காரணிகள் ஆகும்.
  • மேலும் இது இந்தியாவின் தனிநபர் சூழலியல் தடமானது 1.75 ஹெக்டேர்கள் / தனிநபர் என்பதை விட குறைவாக, அதாவது ஆராயப்பட்ட நாடுகளில் இதுவே மோசமான அளவாக உள்ளது எனவும் இந்தியாவின் அதிக மக்கட்தொகையானது சுற்றுச்சூழல் பிரச்சனையால் அதிக பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்பதையும் காட்டுகிறது.
  • உலகத்திற்கான அபாயக் குறியீடானது நிலத்தில் உள்ள பன்முகத் தன்மையின் இழப்பு, மாசுபாடுகள், அதிகப்படியான ஊட்டச்சத்து, மிகை மேய்ச்சல், தீவிர விவசாயம், தீ, மண் அரிப்பு, பாலைவனமாக்கல் மற்றும் பருவநிலை மாற்றம் ஆகியவற்றின் மூலம் பிரச்சினைகள் ஏற்படுவதைக் குறிக்கிறது.
  • இது ஆண்டுக்கு இருமுறை வெளியிடப்படும் 2018 ஆம் ஆண்டிற்கான வாழும் கிரகத்திற்கான அறிக்கையின் (Living Planet Report 2018) ஒரு பகுதியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்