உலக மதி இறுக்கத்திற்கான விழிப்புணர்வு தினம் - ஏப்ரல் 02
April 11 , 2018 2419 days 812 0
உலகம் முழுவதும் ஏப்ரல் 2ம் தேதி மதி இறுக்கத்தைப் (Autism) பற்றியும் அந்நோயால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் பற்றியும் விழிப்புணர்வை அதிகரிக்க உலக மதி இறுக்க விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்படுகிறது.
மதி இறுக்கம், வாழ்க்கையின் ஆரம்பத்தில் முதல் மூன்று வருடங்களில் ஆரம்பித்து வாழ்நாள் முழுவதும் தொடரும் ஒரு இயலாமையுடைய நோயாகும்.
2018ம் ஆண்டிற்கான கருத்துரு “மன இறுக்கத்துடன் உள்ள பெண்களையும், பெண் குழந்தைகளையும் மேம்படுத்துதல்”, இந்த தினம் 2007ம் ஆண்டு “62/139“என்ற தீர்மானம் மூலம் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
மேலும் இந்த தினம் ஐ.நாவின் உடல் நலம் குறித்த நான்கு முக்கிய அலுவல் பூர்வமான தினங்களில் ஒன்றாகும்.