TNPSC Thervupettagam

உலக மதியிறுக்க நிலை விழிப்புணர்வு தினம் – ஏப்ரல் 02

April 3 , 2024 236 days 349 0
  • மதியிறுக்க நோயால் பாதிக்கப்பட்டவர்களால் மேற்கொள்ளப்பட்ட சாதனைகளைக் கொண்டாடுவதற்காகவும், அவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
  • மதியிறுக்கம் என்பது தகவல் தொடர்பு மற்றும் சமூகம் சார்ந்த தகவல் தொடர்பு ஆகியவற்றினைப் பாதிக்கின்ற நரம்பியல் வளர்ச்சிக் கோளாறு ஆகும்.
  • மதியிறுக்க நோயின் அறிகுறிகளில் சமூகம் சார்ந்த மனக் குழப்பம், பயம் மற்றும் கவனம் செலுத்துவதில் சிரமம் ஆகியவை அடங்கும்.
  • இந்த நிலையானது, ஒரு நபரின் அன்றாட வாழ்க்கையை வெகுவாகப் பாதிக்கின்ற மற்றும் குறிப்பிடத் தக்க பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
  • உலக மதியிறுக்க நோய் விழிப்புணர்வு தினமானது, மதியிறுக்கம் கொண்டவர்களின் தனித்துவத்தை அங்கீகரித்து அவர்களின் வேறுபாடுகளைப் புரிந்து கொள்வதற்கும் ஏற்றுக் கொள்வதற்குமான ஒரு வாய்ப்பாகும்.
  • மதியிறுக்கம் என்பது ஒருவரின் வாழ்நாள் முழுவதும் இருக்கும் குறைப்பாட்டு நிலை என்பதையும், அதற்கு சிகிச்சை இல்லை என்பதையும் நினைவூட்டுகிறது.
  • 2024 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Empowering Autistic Voices" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்