இந்த நாள் ஆனது, உலகம் முழுவதும் மன நலனை மேம்படுத்துவதற்கான தினமாக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, 'மன நலம் ஒரு உலகளாவிய மனித உரிமை' என்பதாகும்.
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, பாதிக்கும் மேலான மனநலப் பிரச்சினைகள் 14 வயதிற்கு முன்பான காலகட்டத்திலேயே தொடங்குகிறது.
70 முதல் 92% இந்தியர்கள் வெவ்வேறு மன நிலைப் பிரச்சினைகளுக்கான மருந்து அல்லது சிகிச்சை பெறுவதில்லை என்று மதிப்பீடுகள் குறிப்பிடுகின்றன.
உளவியலாளர்கள் மற்றும் மனநல மருத்துவர்களின் ஆலோசனை, கலந்துரையாடல் மற்றும் பரிந்துரைகளைப் பெற இந்திய அரசானது Tele-MANAS அல்லது தேசிய தொலை தொடர்பு மனநல சேவைத் திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.
32 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் உள்ள Tele-MANAS சேவையின் 51 பிரிவுகளில் 3,40,000 அழைப்புகள் (அக்டோபர் 08 வரை) பதிவாகியுள்ளன.