TNPSC Thervupettagam

உலக மனிதக் குரங்கு தினம் - செப்டம்பர் 24

September 29 , 2024 55 days 63 0
  • இத்தினமானது இந்த அற்புதமான விலங்குகளைக் கொண்டாடுவதையும் அவற்றைப் பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ‘கொரில்லா’ என்ற சொல் ஆனது முதன்முதலில் 1847 ஆம் ஆண்டில் தாமஸ் ஸ்டாட்டன் சாவேஜ் - ஒரு மருத்துவர் மற்றும் ஜெஃப்ரிஸ் வைமன் - ஓர் இயற்கை ஆர்வலர் ஆகிய இருவரால் பயன்படுத்தப்பட்டது.
  • சரியாக 1,063 மலை வாழ் கொரில்லாக்கள் (மனிதக் குரங்குகள்) இன்று காடுகளில் இருப்பதாக அறியப்படுகிறது.
  • மலை வாழ் கொரில்லாக்கள் கிழக்கு-மத்திய ஆப்பிரிக்காவில் இரண்டு தனிமைப் படுத்தப் பட்ட குழுக்களாக வாழ்கின்றன என்பதோடு அவற்றுள் ஒன்று விருங்கா எரிமலைப் பகுதிகளிலும், மற்றொரு குழு உகாண்டாவின் அசாத்தியமான பிவிண்டி தேசியப் பூங்காவிலும் காணப்படுகின்றன.
  • சுமார் 8-12 வயதுக்கு இடைப்பட்ட ஆண் குரங்குகள் 'பிளாக்பேக்' என்று அழைக்கப் படுகின்றன.
  • பின்னர் 12 வயதிலிருந்தே, அவற்றின் முதுகு மற்றும் இடுப்புப் பகுதிகளில் வெள்ளி நிற ரோமம் உருவாவதால் அவை 'சில்வர்பேக்' என்று அழைக்கப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்