உலக மனிதாபிமான இயக்கம் (WHD) என்பது 12 நாடுகளில் செயல்பட்டு வரும் ஒரு சர்வதேசத் தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஆகும்.
இது பிரிட்டிஷ் இந்திய உலக அமைதி ஆர்வலரான அப்துல் பாசித் சையத் என்பவரால் ஐக்கியப் பேரரசில் நிறுவப்பட்டது.
இந்த நிறுவனமானது சர்வதேசக் கல்வி மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்துவதை ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த நிறுவனத்திற்கு ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூகச் சபையின் (ECOSOC) சிறப்பு ஆலோசனை வழங்கீட்டு நிறுவனம் என்ற அந்தஸ்து வழங்கப் பட்டு உள்ளது.
இந்த நிறுவனமானது இந்தியா மற்றும் ஐக்கியப் பேரரசு ஆகிய நாடுகளுக்கு இடையே ஆன முக்கிய முன்னெடுப்புகளை ஊக்குவிக்கிறது.
ECOSOC சபை உடனான ஆலோசனை வழங்கீட்டு நிறுவனம் என்ற அந்தஸ்து ஆனது, ஐக்கிய நாடுகள் சபையின் துணை நிலை அமைப்புகளுடன் ஒரு உள்ளார்ந்தத் தொடர்பினை மேற்கொள்ளச் செய்வதற்கான அதிகாரத்தினை இந்த நிறுவனத்திற்கு அளிக்கிறது.