தேவைகள் உள்ள மக்களுக்கு உதவிகளை வழங்குவதற்காக தங்கள் உயிரைப் பணயம் வைக்கும் மனிதாபிமான நடவடிக்கைப் பணியாளர்களை கௌரவிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
2003 ஆம் ஆண்டு ஈராக்கின் பாக்தாத்தில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை அலுவலகம் மீது குண்டு வீசி 22 பேர் கொல்லப் பட்டதை நினைவு கூரும் வகையில் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
உலகளாவிய மனிதாபிமான முன்னெடுப்புகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த நாள் ஒரு வாய்ப்பாகக் கருதப்படுகிறது.
இயற்கைப் பேரழிவுகள், மோதல்கள் மற்றும் பிற அவசரநிலைகள் போன்ற பல்வேறு நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிப்பதற்கான ஒரு உலகளாவிய நடவடிக்கையை இந்த நாள் ஊக்குவிக்கிறது.
2024 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, “Act for Humanity” என்பதாகும்.