இந்த நாள் மயக்க மருந்தின் முதல் வெற்றிகரமான பயன்பாட்டினைக் கௌரவித்து இந்த மைல்கல்லை நினைவுகூரும் விதமாகக் கொண்டாடப்படுகிறது.
மயக்க மருந்து என்பது அறுவை சிகிச்சை, திசு மாதிரி அகற்றுதல், பல் மருத்துவம் சார்ந்த வேலைகள், சில ஆய்வுகள் மற்றும் சில நோயறிதல் சோதனைகள் போன்ற சிகிச்சைகளின் போது நோயாளிகள் வலியை உணராமல் அதைத் தடுப்பதற்கான ஒரு மருத்துவ முறையாகும்.
1846 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் தேதியன்று, அமெரிக்கப் பல் மருத்துவரும் நோய் சார் மருத்துவருமான வில்லியம் தாமஸ் கிரீன் மோர்டன் முதன்முதலில் டைஎத்தில் ஈதர் மயக்க மருந்துப் பரிசோதனையை மேற்கொண்டார்.
2024 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Workforce Well Being" ஆகும்.