இந்தத் தினமானது, நமது இயற்கை வளங்கள் வேகமாக குறைந்து வருவது பற்றியும், அவை குறைந்து வருவதன் வேகத்தினைத் தடுப்பதற்காக மறுசுழற்சி மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் பற்றியும் விழிப்புணர்வை பரப்பச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மறுசுழற்சியின் கருத்தாக்கத்தினையும் நடைமுறையையும் இந்தத் தினம் ஊக்குவிப்பதோடு, மேலும், புவிக் கோளினைக் காப்பதற்காக இயற்கை வளங்களை அளவான முறையில் பயன்படுத்துவதனை ஊக்குவிக்கிறது.
2023 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "படைப்பாற்றல் மிக்க புத்தாக்கம்" என்பதாகும்.