TNPSC Thervupettagam

உலக மலேரியா அறிக்கை 2023

December 6 , 2023 226 days 229 0
  • 2022 ஆம் ஆண்டில் உலகளவில் பதிவான மலேரியா பாதிப்பு எண்ணிக்கைகள் 249 மில்லியனாக உயர்ந்துள்ளதாக உலக சுகாதார அறிக்கை வெளிப்படுத்துகிறது.
  • இது பெருந்தொற்றுக் காலத்திற்கு முன்பு பதிவான அளவை விட 16 மில்லியன் அளவு அதிகரித்துள்ளது.
  • உலகளாவிய மலேரியா எதிர்ப்பு நடவடிக்கைகள் ஆனது, கோவிட்-19 பெருந்தொற்று சார்ந்த இடையூறுகள், மருந்து மற்றும் பூச்சிக் கொல்லி எதிர்ப்புத் திறன், முக்கிய மனிதாபிமான நெருக்கடிகள், வளங்களின் பற்றாக்குறை சார்ந்த கட்டுப்பாடுகள் மற்றும் பருவநிலை மாற்றப் பாதிப்புகள் உட்பட பல சவால்களை எதிர்கொள்கிறது.
  • உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்த முதல் மலேரியா தடுப்பூசி RTS,S/AS01 உள்ளிட்ட பல தடுப்பூசிகளின் உருவாக்கத்தினை இந்த அறிக்கை அங்கீகரிக்கிறது.
  • சமீபத்தில் R21/Matrix-M எனப்படும் இரண்டாவது தடுப்பூசியினைப் பயன்படுத்தவும் உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்தது.
  • நைஜீரியா (27%), காங்கோ ஜனநாயகக் குடியரசு (12%), உகாண்டா (5%), மற்றும் மொசாம்பிக் (4%) ஆகிய நான்கு நாடுகள் உலகளவில் பதிவான மலேரியா பாதிப்புகளில் சுமார் பாதிக்கும் மேற்பட்ட பங்கினைக் கொண்டுள்ளன.
  • 2022 ஆம் ஆண்டில் உலக சுகாதார அமைப்பின் தென்-கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் பதிவான மலேரியா பாதிப்புகளில் வியத்தகு வகையில் இந்தியா 66% பங்கினைக் கொண்டுள்ளது.
  • ஒரு புரோட்டோசோவா ஒட்டுண்ணியான பிளாஸ்மோடியம் விவாக்ஸ், இப்பகுதியில் சுமார் 46% மலேரியா பாதிப்புகளுக்குக் காரணமாயிருந்தது.
  • உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் மலேரியாவால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்புகளில் 94% இறப்புகள் இந்தியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளில் பதிவாகியுள்ளன.
  • 2022 ஆம் ஆண்டில், 94% மலேரியா பாதிப்புகள் மற்றும் உலகளவில் மலேரியாவால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்புகளில் 95% பங்குடன் ஆப்பிரிக்கா அதிக மலேரியா பாதிப்பு எண்ணிக்கையைக் கொண்டுள்ளது.
  • உலக சுகாதார அமைப்பு ஆனது, மலேரியா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு விகிதங்களை 2025 ஆம் ஆண்டில் 75% ஆகவும், 2030 ஆம் ஆண்டில் 90% ஆகவும் குறைப்பதற்கு இலக்கு நிர்ணயித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்