2023 ஆம் ஆண்டில், தென்கிழக்கு ஆசியப் பகுதியில் நான்கு மில்லியன் பாதிப்புகள் பதிவாகியுள்ள எட்டு மலேரியா தொற்று மிக்க நாடுகள் உள்ளன.
பிராந்தியத்தில் பதிவாகியுள்ள பாதி எண்ணிக்கையிலான பாதிப்புகள் இந்தியாவில் மட்டுமே பதிவாகியுள்ள நிலையில் அதைத் தொடர்ந்து இந்தோனேசியாவானது சுமார் மூன்றில் ஒரு பங்கினைக் கொண்டுள்ளது.
இந்தியாவில், 2000 முதல் 2023 ஆம் ஆண்டு வரை 17.7 மில்லியன் பாதிப்புகள் குறைந்து உள்ளன.
1,000 பேருக்கு சுமார் 20 பாதிப்புகளாக இருந்த ஆபத்து நிலையில் உள்ளவர்களின் எண்ணிக்கையானது சுமார் 1.5 பாதிப்புகளாகக் குறைந்துள்ளதையடுத்து, மலேரியா பாதிப்புகள் 93% குறைந்துள்ளது.
2016 ஆம் ஆண்டில் இலங்கை மலேரியா பாதிப்பு அற்ற நாடு என சான்றளிக்கப்பட்டது.
உலகளவில், 2023 ஆம் ஆண்டில், 83 மலேரியா தொற்று மிக்க நாடுகளில் 29 நாடுகள் உலகளாவிய மலேரியா பாதிப்புகளில் சுமார் 95% பாதிப்புகளுக்கும், மலேரியா காரணமான உயிரிழப்புகளில் 96% உயிரிழப்புகளுக்கும் காரணமாக இருந்தன.
நைஜீரியா (25.9%), காங்கோ ஜனநாயகக் குடியரசு (12.6%), உகாண்டா (4.8%), எத்தியோப்பியா (3.6%), மற்றும் மொசாம்பிக் (3.5%) ஆகியவை உலகம் முழுவதும் உள்ள மலேரியா நோயாளிகளில் பாதிக்கும் மேற்பட்ட பாதிப்புகளைக் கொண்டுள்ளன.
நைஜீரியா (30.9%), காங்கோ ஜனநாயகக் குடியரசு (11.3%), நைஜர் (5.9%), மற்றும் தான்சானியா (4.3%) ஆகிய நான்கு நாடுகள் மட்டும் உலகளவிலான மலேரியா உயிரிழப்புகளில் பாதிக்கும் மேற்பட்ட பங்கினைக் கொண்டுள்ளன.