உலக சுகாதார அமைப்பான (WHO – World health Organization) சமீபத்தில் உலக மலேரியா அறிக்கையை வெளியிட்டுள்ளது.
உலகம் முழுவதும் அதிக பாதிப்புகளைக் கொண்ட 11 நாடுகளில் 2017 ஆம் ஆண்டில் இந்தியா மட்டுமே மலேரிய நோய் பாதிப்புகளை கணிசமான அளவில் குறைத்துள்ளதாக இந்த அறிக்கை தெரிவிக்கின்றது.
இந்த அறிக்கையின்படி 2017 ஆம் ஆண்டில் உலக மலேரியா நோயாளிகளில் 4% நோயாளிகளை இந்தியா மட்டுமே கொண்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அப்போதிலிருந்தே மலேரியாவைக் குறைப்பதில் இந்தியா குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் கண்டுள்ளது.
இந்தியாவானது 2016 ஆம் ஆண்டு மட்டும் 24% என்ற அளவில் மலேரியா பாதிப்பைக் குறைத்துள்ளது. இது குறிப்பாக அதிக மலேரியா பாதிப்புக்குள்ளான ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட குறைப்பால் நிகழ்ந்தது.
இந்தியாவில் உள்ள மொத்த மலேரியா நோய் பாதிப்புகளில் கிட்டத்தட்ட 40% என்ற அளவை ஒடிசா பங்களிக்கின்றது.
குறிப்பு
2017 ஆம் ஆண்டில், இந்தியாவானது மலேரியா நோய்த் தடுப்பிற்கான 5 ஆண்டு தேசிய யுக்திமுறைச் சார்ந்த திட்டத்தின் குறிக்கோளை மலேரியாவை ‘கட்டுப்படுத்துதல்’ என்பதிலிருந்து ’அகற்றுதல்’ என மாற்றிக் கொண்டது.
இது 2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் உள்ள 628 மாவட்டங்களில் 571 மாவட்டங்களில் இருந்து மலேரியாவை ஒழிக்கும் இலக்குகளைக் கொண்ட செயல்முறைகளை வழங்கியது.
2018 ஆம் ஆண்டில் மலேரியா அற்ற நாடாக பராகுவேயை WHO அறிவித்துள்ளது. கடந்த 45 ஆண்டுகளில் இந்த நிலையைப் பெற்ற அமெரிக்க கண்டத்தின் முதல் நாடாக பராகுவே ஆகியுள்ளது.