உலகம் முழுவதும் ஆண்டுதோறும் ஏப்ரல் 25 ஆம் தேதி உலக மலேரியா தினம் கொண்டாடப்படுகின்றது.
ஏந்திகள் வழியே பரவும் (preventable vector borne disease) தடுக்கப்படக் கூடிய நோயான மலேரியா நோயினை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்டுள்ள உலகளாவிய முயற்சிகளினை அங்கீகரிப்பதற்காக உலக மலேரியா தினம் கொண்டாடப்படுகின்றது.
2018-ஆம் ஆண்டிற்கான உலக மலேரியா தினத்தின் கருத்துரு “மலேரியாவை தோற்கடிக்க தயாராகுதல்” (Ready to beat malaria).
உலக சுகாதார நிறுவனத்தின் (World Health Organization-WHO) முடிவெடுக்கும் அமைப்பான உலக சுகாதார அவையின் 60வது பொதுக் கூட்டத்தில் 2007 ஆம் ஆண்டு உலக மலேரியா தினம் தோற்றுவிக்கப்பட்டது.