உலகம் முழுவதும் மலேரியா பரவுவதை அங்கீகரித்து, அந்த நோயை ஒழிப்பதற்கான ஒரு உலகளாவியப் பிரச்சாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது இத்தினத்தின் நோக்கமாகும்.
இந்த நாள் முதன்முதலில் 2008 ஆம் ஆண்டில் அனுசரிக்கப்பட்டது.
இந்தத் தினம் 2001 ஆம் ஆண்டு முதல் ஆப்பிரிக்க நாடுகளால் அனுசரிக்கப்பட்ட ஆப்பிரிக்க மலேரியா தினத்திலிருந்து உருவானது.
உலக சுகாதார அமைப்பின் ஆப்பிரிக்கப் பிராந்தியத்தில் இந்த நோயின் பாதிப்பு அதிகளவில் உள்ளது. என்ற நிலையில் 2022 ஆம் ஆண்டில் பதிவான மலேரியா பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் முறையே 94% மற்றும் 95% ஆகும்.
2022 ஆம் ஆண்டில் 6,08,000 மலேரியா உயிரிழப்புகள் பதிவாகின.
2022 ஆம் ஆண்டில் 249 மில்லியன் புதிய மலேரியா பாதிப்புகள் உறுதி செய்யப் பட்டு உள்ளன.
2024 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Accelerating the fight against malaria for a more equitable world" என்பதாகும்.