ஹங்கேரியின் புத்தபெஸ்டில் அக்டோபர் 20 முதல் அக்டோபர் 28 வரை உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் கூட்டுப் போட்டிகளின் 15வது பதிப்பான 2018 ஆம் ஆண்டிற்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றன.
இந்த முறைசாரா உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியானது ஐக்கிய உலக மல்யுத்த மன்றத்தால் நடத்தப்பட்டது.
2018 ஆம் ஆண்டிற்கான போட்டிகளில் ஜப்பான் பெரும்பாலான பதக்கங்களைப் பெற்றுள்ளது. ஜப்பான் 10 பதக்கங்களைப் பெற்றுள்ளது. இரஷ்யா 8 பதக்கங்களுடன் 2வது இடத்தில் உள்ளது.
இந்தியா 1 வெள்ளி மற்றும் 1 வெண்கலம் என மொத்தம் 2 பதக்கங்களை வென்று 17 வது இடத்தில் உள்ளது.
பாஜ்ராங் புனியா வெள்ளிப் பதக்கம் வென்றார்.
பூஜா தண்டா வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் பெற்ற 4வது இந்தியப் பெண்மணியாக பூஜா தண்டா உருவெடுத்துள்ளார்.