இத்தினமானது பிப்ரவரி மாதத்தின் மூன்றாவது வியாழக்கிழமையன்று அனுசரிக்கப் படுகிறது.
இது மானுடவியல் துறையை ஊக்குவிக்கச் செய்வதையும், உலகெங்கிலும் உள்ள மனிதப் பன்முகத் தன்மை, கலாச்சாரங்கள் மற்றும் சமூகங்களைப் புரிந்து கொள்வதில் அதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் ஒரு நோக்கமாகக் கொண்டு உள்ளது.
இத்தினமானது அமெரிக்க மானுடவியல் சங்கத்தினால் 2015 ஆம் ஆண்டில் நிறுவப் பட்டது.
முதலில் தேசிய மானுடவியல் தினம் என்று அழைக்கப்பட்ட இத்தினமானது பின்பு 2016 ஆம் ஆண்டில் உலக மானுடவியல் தினமாக மாற்றப்பட்டது.