போலந்து-அமெரிக்க சமூக அறிவியலாளரும் மிதிவண்டி ஓட்டுதல் ஆர்வலருமான பேராசிரியர் லெசெக் சிபில்ஸ்கி என்பவர் மிதிவண்டி தினக் கொண்டாட்டத்தினைக் கொண்டாடுவதற்கானக் கருத்தாக்கத்தினை முன்வைத்தார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்த நாளை அறிவித்தது.
இது மிதிவண்டி ஓட்டுதலின் பல்வேறு நன்மைகள் பற்றிய ஒரு விழிப்புணர்வைப் பரப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது மற்றும் நிலையான வாழ்க்கை முறையை செயல்படுத்தும் போக்குவரத்து முறையாக மிதிவண்டியினைப் பயன்படுத்த வேண்டி மக்களை வலியுறுத்துகிறது.
இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "Promoting Health, Equity, and Sustainability through Cycling" என்பதாகும்.