56 நாடுகளுடன் இணைந்து ஐக்கிய நாடுகள் அமைப்பினால் 2019 ஆம் ஆண்டு ஜூன் 03 அன்று உலக மிதிவண்டி தினம் அனுசரிக்கப்படுகின்றது.
இத்தினம் இரண்டு நூற்றாண்டுகளாகப் பயன்பாட்டில் இருக்கும் மிதிவண்டியின் தனித்துவம், நீண்ட காலப் பயன்பாடு, பல்துறைப் பயன்பாடு ஆகியவற்றை அங்கீகரிக்கின்றது. இது ஒரு எளிமையான, குறைந்த செலவு கொண்ட, நம்பத் தகுந்த, தூய்மையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையிலான போக்குவரத்தின் ஒரு வகையாகும்.
2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஜூன் 03 ஆம் தேதியை சர்வதேச உலக மிதிவண்டி தினமாக அறிவித்தது.