2018-ஆம் ஆண்டு ஜூன் 3-ஆம் தேதி அன்று முதல் அதிகாரப்பூர்வ உலக மிதிவண்டி தினம் (World Bicycle Day) கொண்டாடப்பட்டது.
உலக மிதிவண்டி தினமானது எளிய, மலிவான, நம்பத்தகு, தூய்மையான, சுற்றுச்சூழல் ரீதியில் பொருந்தக்கூடிய நீடித்தப் போக்குவரத்து முறையை ஊக்குவிக்கின்றது.
இந்தப் பிரகடனமானது அனைத்து உறுப்பு நாடுகள் மற்றும் இது தொடர்புடைய பங்குதாரர்கள் மிதிவண்டியைப் பற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த அழைப்பு விடுத்துள்ளது.
உலக மிதிவண்டி தினத்தை தோற்றுவிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட பிரச்சாரமானது உலக மிதிவண்டி கூட்டணி (World Cycling Alliance) மற்றும் ஐரோப்பிய மிதிவண்டி அறக்கட்டளை (European Cyclists’ Federation) ஆகியவற்றின் இலக்காகும்.