TNPSC Thervupettagam

உலக மின்னணு – கழிவுகள் அறிக்கை

July 7 , 2020 1476 days 770 0
  • உலக மின்னணு கழிவுகள் ஆனது 2020 மற்றும் 2030 ஆகிய காலக்கட்டத்திற்கு இடைப்பட்ட பத்தாண்டுகளில் 38% என்ற அளவிற்கு அதிகரிக்க இருக்கின்றது.
  • இந்தத் தகவலானது சமீபத்திய ஐக்கிய நாடுகள் பல்கலைக்கழக அறிக்கையின் மூலம் வெளிப்படுத்தப் பட்டது.
  • இந்த அறிக்கையானது, “உலக மின்னணுக் கண்காணிப்பு 2020 அறிக்கை – அளவு, ஓட்டம் மற்றும் சுழல் பொருளாதார சாத்தியத் தன்மை” என்று பெயரிடப் பட்டு உள்ளது.
  • மின்னணுக் கழிவுகளில் சீனாவானது 10.1 மில்லியன் டன்கள் கழிவுகளுடன் மிகப்பெரிய பங்களிப்பைக் கொண்டிருக்கின்றது.
  • இதற்கு அடுத்து 6.9 மில்லியன் டன்களுடன் அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் 3.2 மில்லியன் டன்களுடன் இந்தியா மூன்றாம் இடத்திலும் உள்ளது.
  • இந்த அறிக்கையானது ஐக்கிய நாடுகள் பல்கலைக்கழகத்தினால் (UNU - UN University) ஏற்படுத்தப்பட்ட உலக மின்னணுக் கழிவுகள் புள்ளியியல் பங்காளர் அமைப்பு, சர்வதேசத் தொலைத்தொடர்பு ஒன்றியம் மற்றும் சர்வதேசத் திடக் கழிவு மன்றம் ஆகியவற்றுடனும் ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டத்தின் மூலமும் இணைந்து உருவாக்கப் பட்டது.
  • UNU என்பது ஜப்பானில் தலைமையிடத்தைக் கொண்ட ஒரு உலகளாவிய கொள்கை வகுக்கும் அமைப்பு மற்றும் முதுகலை கற்பித்தல் அமைப்பாகும்.
  • மத்திய சுற்றுச்சுழல், வன மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சகமானது மின்னணுக் கழிவு மேலாண்மை விதிகள், 2016 என்ற விதிகளை வெளியிட்டு உள்ளது.
  • முதன்முறையாக, இந்த விதிகள் இலக்குகளுடன் நீட்டிக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்புடைமையின் கீழ் உற்பத்தியாளர்களைத் தனது வரம்பிற்குள் கொண்டு வந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்