TNPSC Thervupettagam

உலக மீத்தேன் உமிழ்வு கண்காணிப்பு அறிக்கை

March 4 , 2023 637 days 297 0
  • சர்வதேச எரிசக்தி முகமையானது (IEA), அதன் வருடாந்திர உலக மீத்தேன் உமிழ்வு கண்காணிப்பு அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
  • இந்த அறிக்கையின்படி, புதைபடிவ எரிபொருள் நிறுவனங்கள் ஆனது 2022 ஆம் ஆண்டில் 120 மில்லியன் மெட்ரிக் டன் அளவிலான மீத்தேன் வாயுவினை வளி மண்டலத்தில் இருந்து வெளியேற்றியுள்ளன.
  • இது 2019 ஆம் ஆண்டில் பதிவான சாதனை அளவிலான உச்ச நிலையை விட சற்று குறைவாகும்.
  • இதில் சிறந்த செயல்திறன் கொண்ட நாடுகள், மோசமான செயல் திறன் கொண்ட நாடுகளை விட 100 மடங்குக்கு மேல் சிறந்ததாக உள்ளன.
  • நார்வே மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் உமிழ்வுச் செறிவானது குறைவாகவே உள்ளது.
  • சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற மத்தியக் கிழக்கு நாடுகளும் ஒப்பீட்டளவில் குறைந்த உமிழ்வு செறிவினைக் கொண்டுள்ளன.
  • துர்க்மெனிஸ்தான் மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளில் அதிக உமிழ்வு பதிவாகி உள்ளது.
  • எரிசக்தித் துறையில் இருந்து வெளியேற்றப்படும் 75 சதவீத மீத்தேன் வாயுவினை மலிவான மற்றும் எளிதில் கிடைக்கக் கூடிய ஒரு தொழில்நுட்பத்தின் உதவியுடன் குறைக்க முடியும்.
  • மனித நடவடிக்கைகள் மூலம் வெளியிடப்படும் மொத்தச் சராசரி மீத்தேன் உமிழ்வில் 40 சதவீதம் எரிசக்தி துறையில் தான் வெளியிடப்படுகிறது.
  • எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனங்களானது, இயற்கை எரிவாயு எரியூட்டப்படும் போது அல்லது வெளியேற்றப்படும் போது வளிமண்டலத்தில் மீத்தேன் வாயுவினை வெளியிடுவதாக அறியப் படுகிறது.
  • தொழில்துறைமயமாக்கக் காலத்திற்கு முந்தையக் காலத்திலிருந்தே கார்பன் டை ஆக்சைடுக்கு அடுத்தபடியாக, புவியின் 30 சதவீத வெப்பமயமாதலுக்கு காரணமாக உள்ள மீத்தேன் ஒரு பசுமை இல்ல வாயு ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்