1997-ல் உலக மீனவர் மன்றம் (World Fisheries Forum) தோற்றுவிக்கப்பட்டதை நினைவு கூறும் வகையில் உலகம் முழுவதும் ஆண்டுதோறும் நவம்பர்-21 ஆம் தேதி உலக மீனவர் தினம் கொண்டாடப்படுகிறது.
உலகம் முழுவதும் நீடித்த மீன்பிடிப்பு மற்றும் கொள்கைகள் கட்டாயம் வேண்டும் என்பதை எடுத்துரைக்கும் விதமாக இத்தினம் கொண்டாடப்படுகின்றது.
இந்தியாவில் இத்தினம் தொடர்ச்சியாக நான்காவது ஆண்டாக கால்நடைவளர்ப்பு, பால் மற்றும் மீன்வளத்துறை சார்பாக கொண்டாடப்படுகின்றது.
இத்தினம் தொடங்கப்பட்டு இருபது ஆண்டுகளாகியும் இதுவரை ஐநா அவையின் அங்கீகாரத்தை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
துரித தகவல்கள்
உலக மீனவர்கள் தினத்தை முன்னிட்டு கேரளாவில் உள்ள கொச்சியில் 11- வது இந்திய மீன்பிடிப்பு மற்றும் நீர்வாழ் உயிரிகள் வளர்ப்பு மன்றம் தொடங்கப்பட்டது.
இந்த மன்றத்தின் கருத்துரு “நீர்வாழ் உயிரிகள் மற்றும் மீன்பிடித்துறையில் புத்தாக்கங்களை வளர்த்தல்”
இந்தியா உலகின் மூன்றாவது பெரிய மீன் உற்பத்தி செய்யும் நாடாகும்.
இந்தியா உலகின் இரண்டாவது பெரிய நீர்வாழ் உயிரினங்கள் உற்பத்தி செய்யும் நாடாகும்.