TNPSC Thervupettagam

உலக மீனவர் தினம் – நவம்பர் 21

November 21 , 2017 2619 days 1555 0
  • 1997-ல் உலக மீனவர் மன்றம் (World Fisheries Forum) தோற்றுவிக்கப்பட்டதை நினைவு கூறும் வகையில் உலகம் முழுவதும் ஆண்டுதோறும் நவம்பர்-21 ஆம் தேதி உலக மீனவர் தினம் கொண்டாடப்படுகிறது.
  • உலகம் முழுவதும் நீடித்த மீன்பிடிப்பு மற்றும் கொள்கைகள் கட்டாயம் வேண்டும் என்பதை எடுத்துரைக்கும் விதமாக இத்தினம் கொண்டாடப்படுகின்றது.
  • இந்தியாவில் இத்தினம் தொடர்ச்சியாக நான்காவது ஆண்டாக கால்நடைவளர்ப்பு, பால் மற்றும் மீன்வளத்துறை சார்பாக கொண்டாடப்படுகின்றது.
  • இத்தினம் தொடங்கப்பட்டு இருபது ஆண்டுகளாகியும் இதுவரை ஐநா அவையின் அங்கீகாரத்தை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
துரித தகவல்கள்
  • உலக மீனவர்கள் தினத்தை முன்னிட்டு கேரளாவில் உள்ள கொச்சியில் 11- வது இந்திய மீன்பிடிப்பு மற்றும் நீர்வாழ் உயிரிகள் வளர்ப்பு மன்றம் தொடங்கப்பட்டது.
  • இந்த மன்றத்தின் கருத்துரு “நீர்வாழ் உயிரிகள் மற்றும் மீன்பிடித்துறையில் புத்தாக்கங்களை வளர்த்தல்”
  • இந்தியா உலகின் மூன்றாவது பெரிய மீன் உற்பத்தி செய்யும் நாடாகும்.
  • இந்தியா உலகின் இரண்டாவது பெரிய நீர்வாழ் உயிரினங்கள் உற்பத்தி செய்யும் நாடாகும்.
  • இந்திய கடற்கரையின் நீளம் = 7516 கி.மீ.
  • தமிழ்நாட்டின் கடற்கரையின் நீளம் = 1076 கி.மீ.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்