உலக மீன் பிடி தினமானது ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 21 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இது ஆரோக்கியமான கடல் சூழலியலின் முக்கியத்துவத்தை முன்னிலைப் படுத்துவதையும், உலகின் மீன்பிடித் துறையில் நீடித்த வளங்கள் இருப்பதை உறுதி செய்வதையும் நோக்கமாக கொண்டுள்ளது.
மீன்பிடித் தொழிலானது நாட்டின் பொருளதாரத்தில் முக்கியப் பங்கினை வகிக்கிறது. இதன் செயல்பாடுகள் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 1.07 சதவீத பங்களிப்பை அளிக்கின்றது.