உலகெங்கிலும் உள்ள அனைத்து மீனவர்கள், மீன் வளர்ப்பு விவசாயிகள் மற்றும் அது தொடர்புடைய பங்குதாரர்களுடனான ஒற்றுமையை வெளிப்படுத்துவதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
1997 ஆம் ஆண்டில் புது டெல்லியில் நடைபெற்ற “உலக மீன் வளர்ப்புத் தொழில் செய்பவர்கள் மற்றும் மீன் பிடி தொழிலாளர்களின் மன்றத்தின்போது” இந்தத் தினம் தொடங்கப் பட்டது.
இந்த நிகழ்வு ஆனது, 18 நாடுகளின் பிரதிநிதிகளுடன் கூடிய “உலக மீன்பிடி மன்றம்” உருவாவதற்கு வழிவகுத்தது.
நிலையான மீன்பிடி நடைமுறைகள் மற்றும் கொள்கைகளின் உலகளாவிய விதிமுறையை ஆதரிக்கச் செய்யும் வகையில் அந்த மன்றத்தினர் ஒரு பிரகடனத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
இந்நிகழ்ச்சியானது அதிகப்படியான மீன்பிடித்தல், வாழ்விட அழிப்பு மற்றும் நமது கடல் மற்றும் நன்னீர் வளங்களின் நிலைத்தன்மைக்கு ஏற்படும் ஒரு கடுமையான அச்சுறுத்தல்கள் குறித்த கவனத்தை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.