TNPSC Thervupettagam

உலக மீன்வள தினம் - நவம்பர் 21

November 24 , 2022 639 days 260 0
  • 1997 ஆம் ஆண்டில் புதுடெல்லியில் நடைபெற்ற “உலக மீன் வளர்ப்பு மற்றும் மீன் தொழிலாளர் மன்றத்தின்” போது தொடங்கப்பட்டது.
  • இது 18 நாடுகளின் பிரதிநிதிகளுடன் கூடிய "உலக மீன்வள மன்றம்" நிறுவப் படுவதற்கு வழிவகுத்தது.
  • புதுடெல்லியில் நடைபெற்ற சர்வதேச மீன்வள அமைப்பின் தொடக்க விழாவைக் குறிக்கும் வகையில், 2015 ஆம் ஆண்டில் முதலாவது உலக மீன்வள தினமானது கொண்டாடப் பட்டது.
  • மீன்வளத் துறையானது, இந்த ஆண்டு வளமான கடல் சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் நிலையான மீன்வளத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், டாமன் பகுதியில் இத்தினத்தைக் கொண்டாடியது.
  • ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, மொத்த உலக மீன்வளத்தில் மூன்றில் இரண்டு பங்கு மீன்கள் பிடிக்கப்பட்டுள்ளன.
  • மீன் வளர்ப்பு தொழில் மூலம் மீன் உற்பத்தியில் உலகின் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா உள்ளது.
  • உலக மீன் உற்பத்தியில் இந்தியா 7.7% பங்கினைக் கொண்டுள்ளதால், உலகளவில் நான்காவது பெரிய மீன் ஏற்றுமதியாளராக இந்தியா உள்ளது.
  • 2021 ஆம் ஆண்டில், பாலசோர் மாவட்டம் (ஒரிசா) இந்தியாவின் "சிறந்த கடல்சார் மாவட்டம்" என்ற விருதைப் பெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்