TNPSC Thervupettagam

உலக மீன்வள தினம் – நவம்பர் 21

November 26 , 2020 1373 days 430 0
  • இது மீனவர்கள் கடல் நீருக்குள்ளேயும் அதற்கு வெளியேயும் உயிர் வாழ்வதற்கு உகந்த மற்றும் அந்த மனிதர்களது வாழ்க்கையின் முக்கியத்துவம் குறித்து எடுத்துக் காட்ட உதவுகின்றது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “மீன்வள மதிப்புக் கூட்டுத் தொடரில் சமூகப் பொறுப்புடைமை” என்பதாகும்.
  • இந்தியாவில் முதன்முறையாக, மத்திய மீன் வளத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மீன்வளத் துறையானது உலக மீன்வள தினத்தை அனுசரிக்கின்றது.
  • உலகில் மீன்களின் 2வது மிகப்பெரிய உற்பத்தியாளர் மற்றும் 4வது மிகப்பெரிய ஏற்றுமதியாளர் நாடு இந்தியா ஆகும்.
  • மீன்வளம்  மற்றும் மீன் வளர்ப்பானது இந்தியாவின் ஜிடிபிக்கு 1% பங்களிப்பையும் வேளாண் ஜிடிபிக்கு 5% பங்களிப்பையும் அளிக்கின்றது.
  • இந்திய அரசானது ரூ.20,050 கோடி மதிப்பில் பிரதான் மந்திரி மத்சயா சம்பதா யோஜனா என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
  • இந்தத் திட்டமானது 2024-25 ஆம் ஆண்டு வாக்கில் மீன்களின் உற்பத்தியை 22 பில்லியன் டன்கள் என்ற அளவிற்கு எட்டப்படுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்