இலண்டனைச் சேர்ந்த சொத்து ஆலோசனை வழங்கீட்டு நிறுவனமான நைட் ஃபிராங்க், தான் வெளியிட்ட உலக முதன்மை நகரங்கள் குறியீட்டில் மும்பையை 22வது இடத்தில் குறிப்பிட்டுள்ளது.
இது உயர் ரகக் குடியிருப்பு சொத்துக்களின் வருடாந்திர விலை மதிப்பீட்டை அளவிடச் செய்கிறது.
மும்பை, பெங்களூரு மற்றும் புது டெல்லி ஆகிய மூன்று இந்திய நகரங்களில் 2022 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் அந்த சொத்துகளின் சராசரி ஆண்டு விலைகள் அதிகரித்துள்ளன.
கடந்த ஆண்டுக் குறியீட்டில் 39வது இடத்தில் இருந்த மும்பை 2022 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 22வது இடத்திற்கு முன்னேறியது.
இதில் பெங்களூருவின் தரநிலையும் 41வது இடத்தில் இருந்து 27வது இடத்திற்கு முன்னேறியது.
புது டெல்லியின் தரநிலை 38வது இடத்தில் இருந்து 36வது இடத்திற்கு முன்னேறியது.