TNPSC Thervupettagam

உலக முதலீட்டு அறிக்கை

June 15 , 2019 1863 days 633 0
  • 2019 ஆம் ஆண்டின் உலக முதலீட்டு அறிக்கை வணிக மற்றும் வளர்ச்சி மீதான ஐக்கிய நாடுகள் கருத்தரங்கினால் (UNCTAD - United Nation Conference on Trade and Development) வெளியிடப்பட்டுள்ளது.
  • இது 2018 ஆம் ஆண்டில் இந்தியாவிற்குள் நுழைந்த அந்நிய நேரடி முதலீடானது (FDI - Foreign Direct Investment) 6 சதவிகிதம் அதிகரித்து 42 பில்லியன் அமெரிக்க டாலராக வளர்ந்துள்ளது என்று கூறுகின்றது.
  • 2017-18 ஆம் ஆண்டுகளில் FDI பெற்றதற்கான முன்னிலையில் உள்ள 20 பெரும் பொருளாதாரங்களிடையே இந்தியா தரவரிசைப்படுத்தப் பட்டுள்ளது.
  • உற்பத்தி, தொலைத் தொடர்பு மற்றும் நிதியியல் சேவை ஆகிய துறைகள் இவற்றில் முன்னிலை வகிக்கின்றன.
UNCTAD
  • 195 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ள இந்த அமைப்பு 1964 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.
  • இதன் முக்கியப் பணி வளர்ந்து வரும் நாடுகளின் வர்த்தகம், முதலீடு மற்றும் வளர்ச்சி வாய்ப்புகளை அதிகரிக்கச் செய்வதாகும்.
  • மேலும் இது உலகப் பொருளாதாரத்தில் வளரும் நாடுகள் ஒருங்கிணைவதற்காக அந்த நாடுகளின் முயற்சிகளுக்கு உதவுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்