உலகெங்கிலும் அழிந்து வரும் முதலைகள் மற்றும் பெரிய அலகுடைய முதலைகளின் அவலநிலையை முன்னிலைப்படுத்தச் செய்வதற்காக என்று இந்த ஒரு உலகளாவிய விழிப்புணர்வுத் தினமானது அனுசரிக்கப்படுகிறது.
முதலாவது உலக முதலை தினமானது 2017 ஆம் ஆண்டு ஜூன் 17 ஆம் தேதியன்று நடத்தப் பட்டது.
க்ரோகோடிலியா என்ற ஊர்வன வரிசையைச் சேர்ந்த 23 வகையான நீர்வாழ் விலங்குகளில் முதலையும் ஒன்றாகும்.
இது ஆப்பிரிக்கா, ஆசியா, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா முழுவதும் வாழும் ஒரு பெரிய நீர்வாழ் ஊர்வன இனமாகும்.
ஆறுகள், ஏரிகள், சதுப்பு நிலங்கள் போன்ற நன்னீர் வாழ்விடங்களில் அவை திரளாக காணப் படுகின்றன.
உப்பு நீர் வாழ் முதலை போன்ற சில இனங்கள் பெரும்பாலும் கடலோரப் பகுதிகளில் வாழ்கின்றன.
இந்தியாவில் பரந்தகன்ற மூக்குடைய முதலை அல்லது சதுப்பு நில முதலை, கழிமுகம் அல்லது உப்பு நீர் முதலை மற்றும் கங்கை நீர் முதலை ஆகிய மூன்று முதலை இனங்கள் காணப் படுகின்றன.