TNPSC Thervupettagam

உலக முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு தினம் - ஜூன் 15

June 17 , 2023 530 days 274 0
  • முதியோர்களைப் பாதிக்கும் பண்பாட்டு, சமூக, பொருளாதார மற்றும் ஜனநாயக செயல்முறைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் முதியோர் எதிர் கொள்ளும் வன்கொடுமைகள் பற்றிய சரியான புரிதலை  வழங்கச் செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த வருடாந்திர நிகழ்வானது, முதியோர் வன்கொடுமை தடுப்புக்கான சர்வதேச வலையமைப்பு மற்றும் உலக சுகாதார அமைப்பு ஆகியவற்றினால் 2006 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டது .
  • 2030 ஆம் ஆண்டிற்குள் உலகில் உள்ள முதியோரின் எண்ணிக்கை 1.4 பில்லியனாக இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
  • 2023 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "சுழற்சி முறைப் பாதிப்பினைத் தடுத்தல்: முதியோர்களுக்கான கொள்கை, சட்டம் மற்றும் சான்றுகள் அடிப்படையில் அமைந்த நடவடிக்கைகள் ஆகியவற்றில் நிலவும் ஒரு பாலின அடிப்படையில் அமைந்த வன்முறையை நிவர்த்தி செய்தல்" என்பதாகும்.
  • சமீபத்தியத் தரவுகளின்படி, 28% அளவில் உடல்ரீதியான வன்முறையினாலும், அதைத் தொடர்ந்து அவமரியாதை (54%), வாய்மொழி வன்முறை (36%) மற்றும் புறக்கணிப்பு (29%) போன்றவற்றினாலும் பாதிக்கப் பட்டுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்