இந்தத் தினமானது உலக மூங்கில் அமைப்பின் முயற்சியால் நிறுவப்பட்டது.
உலக மூங்கில் அமைப்பானது முதலாவது உலக மூங்கில் மாநாட்டினை தாய்லாந்தின் பாங்காக் நகரில் ஏற்பாடு செய்தது.
2009 ஆம் ஆண்டில் நடைபெற்ற 8வது உலக மூங்கில் மாநாட்டின் போது அதில் பங்கேற்ற நாடுகள் இந்த நாளை அதிகாரப் பூர்வமாக அறிவித்தன.
மூங்கில் என்பது வேகமாக வளரும் தன்மை மற்றும் அதன் வலிமை, நெகிழ்வுத்தன்மை மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த தன்மை ஆகியவற்றிற்கு பெயர் பெற்ற ஒரு வகை புல் ஆகும்.