இந்த நாள் மூட்டழற்சி பாதிப்பு, ஒருவரது வாழ்க்கையில் அதன் தாக்கம் மற்றும் அறிகுறிகள், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மூட்டழற்சி என்பது மூட்டுவலி அல்லது மூட்டு நோய், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மூட்டுகளின் வீக்கம் அல்லது அழற்சி ஆகியவற்றை குறிக்கிறது.
இது போன்ற 100க்கும் மேற்பட்ட பாதிப்பு நிலைகள் இருந்தாலும், முதுமை மூட்டழற்சி மற்றும் முடக்கு வாதம் ஆகிய இரண்டு பாதிப்புகள் பொதுவாக அதிகளவில் ஏற்படுபவை ஆகும்.
2023 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Living with an RMD at all stages of life" என்பதாகும்.
இந்த நாள் முதுமை மூட்டழற்சி மற்றும் முடக்கு வாத அமைப்பினால் (ARI) நிறுவப் பட்டது.
இத்தினம் முதன்முதலில் 1996 ஆம் ஆண்டு அக்டோபர் 12 ஆம் தேதியன்று அனுசரிக்கப் பட்டது.