உலக மூத்த குடிமக்கள் தினமானது ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 21 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
மூத்த குடிமக்களின் நிலைமை குறித்த விழிப்புணர்வை வளர்க்கவும் முதுமைக் கூர்வு செயல்பாடு வழியாக உதவுவதுமே இதன் நோக்கமாகும்.
இத்தினமானது முன்னாள் அமெரிக்க அதிபர் ரொனால்டு ரீகன் ஆகஸ்ட் 19, 1988 அன்று ஆகஸ்ட் 21ஆம் தேதியை அமெரிக்காவின் தேசிய மூத்த குடிமக்கள் தினமாக அறிவித்து பிரகடனத்தை கையொப்பமிட்ட பிறகு அலுவல்பூர்வமாக கொண்டாட ஆரம்பிக்கப்பட்டது.
மற்ற நாடுகளும் முதியவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக பின்னர் இத்தினத்தை ஏற்றுக் கொண்டன.
பின்னர் டிசம்பர் 14, 1990ல் ஐநா பொதுச்சபையானது ஆகஸ்ட் 21ஐ உலக மூத்த குடிமக்கள் தினமாக அனுசரிப்பதாக அறிவித்தது.