ஆண்டுதோறும் ஜூன் 8-ஆம் தேதி உலகம் முழுவதும் உலக மூளைக்கட்டி தினம் (World Brain Tumour Day) அனுசரிக்கப்படுகின்றது.
மூளைக்கட்டியின் அறிகுறிகள், மேலாண்மை, சிகிச்சை உட்பட இந்நோயின் நிலைகளின் மீது மக்களுக்குக் கற்பித்தலை ஏற்டுத்துவதன் மூலம் மக்களிடையே மூளைக்கட்டியினைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இத்தினம் அனுசரிக்கப்படுகின்றது.
இத்தினமானது முதலில் ஜெர்மன் மூளைக்கட்டிச் சங்கத்தால் (German Brain Tumour Association) அனுசரிக்கப்பட்டது. இச்சங்கமானது மூளைக் கட்டியினைப் பற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் மற்றும் கற்பித்தலை அளிக்கும் ஓர் இலாப நோக்கற்ற நிறுவனமாகும்.