TNPSC Thervupettagam

உலக மேம்பாட்டு அறிக்கை 2023: புலம்பெயர்ந்தோர், அகதிகள் மற்றும் சமூகங்கள்

May 2 , 2023 573 days 319 0
  • உலக வங்கி “உலக மேம்பாட்டு அறிக்கை 2023: புலம்பெயர்ந்தோர், அகதிகள் மற்றும் சமூகங்கள்” என்ற தலைப்பிலான ஓர் அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
  • இலக்கு இடங்கள், போக்குவரத்து மற்றும் இடப் பெயர்வு தொடக்க நாடுகளில் சிறந்த இடம்பெயர்வு நிர்வாகத்திற்கான அவசியத்தினை குறிப்பிட்டுக் காட்டி அதற்கான கொள்கைகளை இந்த அறிக்கை முன்மொழிகிறது.
  • "நிகர்- நோக்க கட்டமைப்பினை" பயன்படுத்தி இடம்பெயர்வு வர்த்தகம் பற்றி இந்த அறிக்கை ஆய்வு செய்தது.
  • "நிகராக்கம்" என்ற அம்சமானது தொழிலாளர் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டதோடு, அது புலம்பெயர்ந்தோரின் திறன்கள் மற்றும் தொடர்புடைய பண்புக் கூறுகள் இலக்கு நாடுகளின் தேவைகளுடன் எவ்வாறு பொருந்துகிறது என்பதில் கவனம் செலுத்துகிறது.
  • "நோக்கம்" என்ற சொல் ஒரு நபர் வாய்ப்பைத் தேடி நகரும் சூழ்நிலைகளைக் குறிக்கிறது.
  • 47 மில்லியன் மக்கள்தொகை கொண்ட ஸ்பெயின், 2100 ஆம் ஆண்டில் மூன்றில் ஒரு பங்காக சுருங்கும் என கணிக்கப் பட்டுள்ளது.
  • மெக்சிகோ, தாய்லாந்து, துனிசியா மற்றும் துருக்கி போன்ற நாடுகளின் மக்கள் தொகை வளர்ச்சி பெறவில்லை என்பதால் அந்த நாடுகளுக்கு விரைவில் அதிக வெளி நாட்டுத் தொழிலாளர்கள் தேவைப் படக் கூடிய சூழல் ஏற்படலாம்.
  • 37 மில்லியன் அகதிகள் உட்பட உலகளவில் சுமார் 184 மில்லியன் மக்கள் தாங்கள் வாழும் நாட்டில் குடியுரிமை இல்லாமல் உள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்