TNPSC Thervupettagam

உலக மேய்ச்சல் நிலங்களின் தரமிழப்பு

May 30 , 2024 32 days 106 0
  • ஐக்கிய நாடுகள் சபையின் பாலைவனமாக்களுக்கு எதிரான உடன்படிக்கை அமைப்பு (UNCCD) புதிய அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
  • உலகில் உள்ள மேய்ச்சல் நிலங்களில் ஏறத்தாழ பாதி தரமிழந்துள்ளதால், அவற்றிற்கான கொள்கைத் தலையீடுகள் தேவைப்படுகின்றன என்பதோடு மேலும் அவற்றைச் சார்ந்த சமூகங்களின் மீது பெரும் கவனம் செலுத்தும் வகையிலான ஆதரவளிப்பும் அவசியமாகும்.
  • UNCCD அறிக்கையானது மேய்ச்சல் நிலங்களைக் கால்நடைகள் அல்லது காட்டு விலங்குகள் மேய்கின்ற இயற்கை அல்லது பகுதியளவு இயற்கை சார்ந்த சுற்றுச்சூழல் அமைப்புகளாக வரையறுக்கிறது.
  • மேய்ச்சல் நிலங்கள் புல், புதர்கள், முள் புதர்கள், திறந்தவெளி காடுகள் மற்றும் வேளாண் காடு அமைப்புகள் (மரங்கள் மற்றும் பயிர்கள் அல்லது மேய்ச்சல் நிலங்களைக் கொண்ட நிலம்) போன்ற தாவரங்களைக் கொண்டுள்ளது.
  • தற்போது, ​​ மேய்ச்சல் நிலங்கள் பூமியின் நிலப்பரப்பின் 80 மில்லியன் சதுர கிமீ பரப்பளவில் பரவியுள்ளது (பூமியின் நிலப் பரப்பில் பாதிக்கு மேல்).
  • உலக உணவு உற்பத்தியில் 16 சதவீதமும், வளர்ப்பு தாவர உண்ணிகளுக்கு பிரதானமாக ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்காவில் 70% தீவனத்தையும் மேய்ச்சல் நிலங்கள் உருவாக்குகின்றன.
  • இந்தியாவில், தார் பாலைவனம் முதல் இமயமலைப் புல்வெளிகள் வரை சுமார் 1.21 மில்லியன் சதுர கி.மீ பரப்பளவில் இந்த மேய்ச்சல் நிலங்கள் பரவியுள்ளன.
  • ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையானது, 2026 ஆம் ஆண்டினைச் சர்வதேச மேய்ச்சல் நிலங்கள் மற்றும் மேய்ப்பர்களின் ஆண்டாக (IYRP) நியமித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்