ஐக்கிய நாடுகள் சபையின் பாலைவனமாக்களுக்கு எதிரான உடன்படிக்கை அமைப்பு (UNCCD) புதிய அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
உலகில் உள்ள மேய்ச்சல் நிலங்களில் ஏறத்தாழ பாதி தரமிழந்துள்ளதால், அவற்றிற்கான கொள்கைத் தலையீடுகள் தேவைப்படுகின்றன என்பதோடு மேலும் அவற்றைச் சார்ந்த சமூகங்களின் மீது பெரும் கவனம் செலுத்தும் வகையிலான ஆதரவளிப்பும் அவசியமாகும்.
UNCCD அறிக்கையானது மேய்ச்சல் நிலங்களைக் கால்நடைகள் அல்லது காட்டு விலங்குகள் மேய்கின்ற இயற்கை அல்லது பகுதியளவு இயற்கை சார்ந்த சுற்றுச்சூழல் அமைப்புகளாக வரையறுக்கிறது.
மேய்ச்சல் நிலங்கள் புல், புதர்கள், முள் புதர்கள், திறந்தவெளி காடுகள் மற்றும் வேளாண் காடு அமைப்புகள் (மரங்கள் மற்றும் பயிர்கள் அல்லது மேய்ச்சல் நிலங்களைக் கொண்ட நிலம்) போன்ற தாவரங்களைக் கொண்டுள்ளது.
தற்போது, மேய்ச்சல் நிலங்கள் பூமியின் நிலப்பரப்பின் 80 மில்லியன் சதுர கிமீ பரப்பளவில் பரவியுள்ளது (பூமியின் நிலப் பரப்பில் பாதிக்கு மேல்).
உலக உணவு உற்பத்தியில் 16 சதவீதமும், வளர்ப்பு தாவர உண்ணிகளுக்கு பிரதானமாக ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்காவில் 70% தீவனத்தையும் மேய்ச்சல் நிலங்கள் உருவாக்குகின்றன.
இந்தியாவில், தார் பாலைவனம் முதல் இமயமலைப் புல்வெளிகள் வரை சுமார் 1.21 மில்லியன் சதுர கி.மீ பரப்பளவில் இந்த மேய்ச்சல் நிலங்கள் பரவியுள்ளன.
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையானது, 2026 ஆம் ஆண்டினைச் சர்வதேச மேய்ச்சல் நிலங்கள் மற்றும் மேய்ப்பர்களின் ஆண்டாக (IYRP) நியமித்துள்ளது.