TNPSC Thervupettagam

உலக யானைகள் தினம் 2023 - ஆகஸ்ட் 12

August 14 , 2023 374 days 228 0
  • வாழிடங்களின் இழப்பு, தந்தங்களை வேட்டையாடுதல், மனித-யானை மோதல்கள் மற்றும் சிறந்தப் பாதுகாப்பு முயற்சிகளுக்கான தேவை உள்ளிட்ட யானைகள் வளங் காப்பில் எதிர்கொண்டு வரும் சவால்களை முன்னிலைப்படுத்த இந்த நாள் ஒரு தளமாக செயல்படுகிறது.
  • 2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதியன்று, கனடா நாட்டவரான பாட்ரிசியா சிம்ஸ் மற்றும் தாய்லாந்து நாட்டின் ராணி சிரிகிட்டின் ஒரு முன்னெடுப்பான தாய்லாந்தின் யானை மறு அறிமுக அறக்கட்டளை ஆகியோர் இணைந்து உலக யானை தினத்தை நிறுவினர்.
  • இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "நிலையான எதிர்காலத்திற்காக யானைகளின் வாழ்விடங்களைப் பாதுகாத்தல்" என்பதாகும்.
  • அனைத்து நிலவாழ்ப் பாலூட்டிகளிலும் யானைகள் மிகப்பெரிய மூளையைக் கொண்டு உள்ளன.
  • ஆப்பிரிக்க யானைகள் "எளிதில் பாதிக்கப்படக் கூடிய இனங்கள்" என்பதாகவும், ஆசிய யானைகள் "அருகி வரும் இனங்கள்" என்பதாகவும் IUCN அமைப்பின் அழிந்து வரும் உயிரினங்களின் செந்நிறப் பட்டியலில் பட்டியலிடப் பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்