புகழ்பெற்ற இந்திய யுனானி அறிஞரான ஹக்கீம் அஜ்மல் கானின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
இந்தியாவில் யுனானி மருத்துவ முறையின் நவீனமயமாக்கலுக்கான உந்துதலாகவும் அவர் இருந்தார்.
கிரேக்க-அரேபிய மருத்துவம் என்றும் அறியப்படும் யுனானி மருத்துவ முறையானது, கிரேக்க மருத்துவர்களான ஹிப்போகிரட்டீஸ் மற்றும் கேலன் ஆகியோரின் போதனைகளில் இருந்து தோன்றியதாகும்.