TNPSC Thervupettagam

உலக யூனிகார்ன் நிறுவனங்கள் குறியீடு 2023

April 22 , 2023 454 days 228 0
  • ஹூருன் அமைப்பின் 2023 ஆம் ஆண்டிற்கான உலக யூனிகார்ன் நிறுவனங்கள் என்ற குறியீட்டின் படி இந்தியா 68 புதிய யூனிகார்ன் நிறுவனங்களுடன் இதில் மூன்றாவது இடத்தினைப் பெற்றுள்ளது.
  • 666 யூனிகார்ன் நிறுவனங்கள் கொண்ட அமெரிக்கா மற்றும் 316 யூனிகார்ன்  நிறுவனங்கள் கொண்ட சீனா  ஆகியவற்றிற்கு அடுத்தபடியாக இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
  • இருப்பினும், இந்தியப் புத்தொழில் நிறுவனங்கள் எதுவும் இந்தப் பட்டியலின் முதல் 10 இடங்களில் இடம் பெறவில்லை.
  • 22 பில்லியன் டாலர் மதிப்புள்ள இயங்கலை கல்வி வழங்கீட்டு நிறுவனமான BYJU’S இந்தியாவின் ஒரு முன்னணி யூனிகார்ன் நிறுவனமாகும்.
  • அதைத் தொடர்ந்து உணவு விநியோகத் தளமான ஸ்விகி மற்றும் கற்பனையான ஒரு  விளையாட்டுத் தளமான ட்ரீம்11 ஆகியவை இடம் பெற்றுள்ளன.
  • இந்தியா அதிக எண்ணிக்கையிலான கேசல் நிலை நிறுவனங்களை (20% விற்பனை அதிகரிப்பினைக் கொண்ட நிறுவனங்கள்) கொண்ட மூன்றாவது நாடாக உள்ளது என்றாலும் ஹுருன் அமைப்பின் 500 உலக நிறுவனங்களின் பட்டியலில் ஐந்தாவது இடத்தினைப்  பெற்றது.
  • சான் பிரான்சிஸ்கோ, ஷாங்காய், பெய்ஜிங் மற்றும் ஷென்சென் ஆகிய நகரங்களை உள்ளடக்கிய அதிகப் புத்தொழில் நிறுவனங்களைக் கொண்ட ஐந்து நகரங்களின் பட்டியலில் பெங்களூரு நகரும் ஒன்றாகும்.
  • இவை அடுத்த 5 ஆண்டுகளுக்குள் ஹுருன் அமைப்பின் 500 உலக நிறுவனங்களின் பட்டியலில் இடம் பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்