பாதுகாப்பான ரத்த தானத்திற்கான தேவையைப் பற்றிய பொது விழிப்புணர்வை அதிகப்படுத்த ஜூன் 14 அன்று உலகம் முழுவதும் உலக ரத்த தான தினம் அனுசரிக்கப்படுகின்றது.
2018ம் ஆண்டிற்கான ரத்த தான தினத்தின் கருத்துரு "யாருக்காகவாது உதவிடுங்கள், ரத்த தானம் செய்யுங்கள், வாழ்க்கையை பகிருங்கள்".
2004ம் ஆண்டிலிருந்து உலக ரத்த தானம் ஆண்டுதோறும் அனுசரிக்கப்பட்டு வருகின்றது. உலக சுகாதார நிறுவனத்தால் பதிவு செய்யப்பட்டுள்ள எட்டு அலுவல் பூர்வ உலகளாவிய பொது சுகாதார பரப்புரைகளில் இதுவும் ஒன்றாகும்.