வெப்ப ரத்த பிராணிகளின் மூளையில் வீக்கத்தை ஏற்படுத்தும் ஒரு வைரல் நோய் ரேபிஸ் ஆகும்.
இது சாதாரணமாக ஒரு உயிரினத்திலிருந்து மற்றொரு உயிரினத்திற்கு பரவும் ஒரு விலங்கு வழி நோயாகும். உதாரணத்திற்கு வைரஸால் பாதிக்கப்பட்ட நாய் மனிதர்களை கடிக்கும் பொழுது இவ்வைரஸ் பரவுகிறது.
இந்த ரேபிஸ் வைரஸ் மத்திய நரம்பு மண்டலத்தை பாதித்து மூளையில் நோயை ஏற்படுத்தி கடைசியில் மரணத்திற்கு வழிகோலுகிறது.