TNPSC Thervupettagam

உலக ரோபோடிக்ஸ் போட்டியில் இந்தியாவுக்கு இரண்டு விருதுகள்

July 20 , 2017 2684 days 1019 0
  • வாஷிங்டனில் நடைபெற்ற முதல் உலக ரோபாட்டிக்ஸ் ஒலிம்பியாட்டில் (First Global Robotics Olympiad) 157 நாடுகள் கலந்துகொண்டது. இதில் ஏழு மாணவர்களைக் கொண்ட இந்தியாவைச் சேர்ந்த குழு இரண்டு விருதுகளைப் வென்றுள்ளது
  • மும்பையைச் சேர்ந்த மாணவர்கள் குழு வாஷிங்டன்னில் பர்ஸ்ட் குளோபல் ஒருங்கிணைத்த ஹாங் ஹெங் பொறியியல் வடிவமைப்பு விருது பிரிவில் தங்கப் பதக்கமும், சர்வதேச ரோபாட்டிக்ஸ் சவால் பிரிவில் வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளனர்.
  • இந்த அணியின் இளைய உறுப்பினரான 15 வயது ராகேஸ் (Rahesh), இந்த அணிக்குத் தலைமை தாங்கினார்.
  • இவர்கள் தயாரித்த ரோபோட்டுக்கு நியூட்ரினோ என்று பெயரிடப்பட்டுள்ளது. இது தரையில் கிடந்த ஆரஞ்சு மற்றும் நீல நிற பந்துகளை எடுத்து, வகைப்படுத்தியது. மேலும், 2.5 அடி வரையான தடைகளை ஏறிக் கடக்கவல்லது.
  • பர்ஸ்ட் குளோபல் எனும் இலாப நோக்கம் இல்லாத தொண்டு நிறுவனம், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணித ஆர்வத்தை தூண்ட ஆண்டுதோறும் ரோபோடிக் போட்டிகளை நடத்துகிறது
  • இந்த உலக ரோபோடிக் போட்டியில், ஒலிம்பிக் பாணியில் ஒவ்வொரு நாட்டின் சார்பாக ஒரு அணி மட்டுமே பங்குபெறும்.
  • வாஷிங்டன் டி.சியில் ஏற்பாடு செய்யப்பட்ட `FIRST Global Challenge 2017' இந்த ரோபாட்டிக்ஸ் ஒலிம்பியாட்டின் தொடக்கப் பதிப்பாக இருந்தது. அதில் 157 நாடுகள் பங்கேற்றன.
  • அடுத்தாண்டுக்கான போட்டி மெக்சிகோவில் நடைபெற இருக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்