தமிழ்நாட்டின் நீர்ப்பாசன வேளாண்மையின் நவீனமயமாக்கல் திட்டத்திற்கு (Tamilnadu Irrigated Agriculture Modernization Scheme) நிதியளிப்பதற்காக உலக வங்கி, இந்தியா மற்றும் தமிழ்நாடு அரசுகளுக்கு இடையே முத்தரப்பு கடன் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
இதன் வழியே, உலக வங்கியின் கடன் நல்கு அமைப்பான மறுகட்டமைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான சர்வதேச வங்கியானது ( International Bank for Reconstruction and Development-IBRD) 19 ஆண்டுகள் முதிர்ச்சி காலத்தோடு (Maturity period), 5 ஆண்டுகள் கூடுதல் அவகாச காலமுடைய (Grace Period) 318 மில்லியன் டாலர்களை கடனாக வழங்க உள்ளது.
சிறு மற்றும் குறு விவசாயிகளின் விளைபொருட்களுக்கு சந்தை வாய்ப்புகளை அதிகரிப்பதற்காகவும், தமிழ்நாட்டின் நீர் மேலாண்மை நடைமுறையை மேம்படுத்துவதற்காகவும், பருவநிலை நெகிழ்திறனுடைய (Climate Resilient) வேளாண் தொழிற்நுட்பத்தை மேம்படுத்துவதற்காகவும் இக்கடனுதவி அளிக்கப்படுகின்றது.