TNPSC Thervupettagam

உலக வங்கியின் அறிக்கை

April 11 , 2023 465 days 247 0
  • ‘தூய்மையான காற்றிற்கான ஒரு போராட்டம்: தெற்கு ஆசியாவில் காற்று மாசுபாடு மற்றும் பொதுச் சுகாதாரம்’ என்ற தலைப்பிலான அறிக்கையானது சமீபத்தில் உலக வங்கியால் வெளியிடப்பட்டுள்ளது.
  • உலகின் மிக மோசமான காற்று மாசுபாடு உள்ள 10 நகரங்களில் ஒன்பது நகரங்கள் தெற்காசியப் பகுதியில் அமைந்துள்ளன.
  • உலகளவில் மோசமான காற்று தரம் உள்ள நகரங்களின் பட்டியலில் டாக்கா ஏழாவது இடத்தில் உள்ளது.
  • வங்காளதேசத்தில் ஏற்படும் மொத்த அகால மரணங்களில் சுமார் 20 சதவீதம் காற்று மாசுபாடு காரணமாக ஏற்படுபவையாகும்.
  • தெற்காசியாவில், ஏறக்குறைய 60% மக்கள் தொகையானது PM2.5 செறிவுகள் குறித்த வருடாந்திரச் சராசரியான 35 μg/m3 (உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கும் அளவு 5 μg/m3) என்ற அளவினை விட அதிகமாக இருக்கும் பகுதிகளில் வாழ்கின்றனர்.
  • மக்கள்தொகை அடர்த்தி அதிகமாக உள்ள இந்திய-கங்கைச் சமவெளியில், இது உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்த அளவை விட 20 மடங்கு அதிகமாக உள்ளது.
  • இந்த அறிக்கையானது, தெற்காசியாவில் உள்ள ஆறு முக்கியக் காற்றுப் படுகைகளை அடையாளம் கண்டுள்ள நிலையில் அங்கு நிலவும் காற்றின் தரத்தில் ஒரு இடஞ்சார்ந்த சார்பு நிலை அதிகமாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்