TNPSC Thervupettagam

உலக வங்கியின் இந்தியாவுக்கான நிர்வாக இயக்குனர் – எஸ்.அபர்ணா

August 6 , 2017 2716 days 1044 0
  • உலக வங்கிக்கான இந்தியாவின் நிர்வாக இயக்குனராக எஸ்.அபர்ணா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • இவர் குஜராத் பணிப் பிரிவைச் சேர்ந்த இந்திய ஆட்சிப் பணியாளர் (IAS) ஆவார். இவர் இந்தியா, பங்களாதேஷ்,பூட்டான் மற்றும் இலங்கை ஆகிய நான்கு நாடுகளுக்கும் சேர்த்து , அடுத்த மூன்று ஆண்டுகளுக்குப் பிரதிநிதியாக பதவி வகிக்கவுள்ளார்.
  • 1988 ஆம் ஆண்டின் பணியாளர் பிரிவைச் சேர்ந்த அபர்ணா, தற்பொழுது குஜராத் முதல்வர் விஜய் ரூபனியின் முதன்மைச் செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
  • தற்பொழுது உலக வங்கிக்கான இந்தியாவின் நிர்வாக இயக்குனராக பதவி வகிக்கும் சுபாஷ் கார்க்குக்குப் பதிலாக அபர்ணா அப்பணியினைத் தொடரவுள்ளார்.
  • சுபாஷ்கார்க், மத்திய நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளராக (Economic Affairs Secretary) நியமிக்கப்பட்டுள்ளார்.
  • பிரதமர் தலைமையிலான அமைச்சரவை நியமனங்கள் குழு (Appointments Committee of the Cabinet - ACC) இவரது பணி நியமனத்தை உறுதி செய்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்