டிரம்ப் நிர்வாகத்தில் பணியாற்றிய அமெரிக்காவின் முன்னணி கருவூல அதிகாரியான டேவிட் மால்பாஸ் என்பவர் உலக வங்கியின் புதிய தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இரண்டாம் உலகப் போருக்குப் பின் தொடங்கப்பட்ட இந்த வங்கியின் அனைத்துத் தலைவர்களும் அமெரிக்கர்கள் ஆவர்.
எந்தவொரு நாட்டைச் சேர்ந்தவரும் உலக வங்கியின் தலைவராக முடியும். ஆனால் இதுநாள் வரை வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள் உலக வங்கியின் தலைவராகப் பொறுப்பேற்கவில்லை.