அமெரிக்க அதிபர் ஜோ பிடன் அவர்கள் இந்திய-அமெரிக்க வணிக நிர்வாகி அஜய் பங்காவினை உலக வங்கியின் தலைவர் பதவிக்குப் பரிந்துரைத்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகிய இரண்டு சிறந்த சர்வதேச நிதி நிறுவனங்களில் ஒன்றின் தலைவராகப் பதவியேற்க உள்ள முதல் இந்திய-அமெரிக்கர் இவரே ஆவார்.
ஒரு நிதிச் சேவை நிறுவனமான மாஸ்டர் கார்டு நிறுவனத் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் இவர் பணியாற்றியுள்ளார்.
2016 ஆம் ஆண்டில், இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்களால் இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப் பட்டது.
உலக வங்கியின் தலைவர், சர்வதேச மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டு வங்கி (IBRD) அல்லது உலக வங்கி மற்றும் சர்வதேச மேம்பாட்டுக் கூட்டமைப்பின் (IDA) நிர்வாக இயக்குநர்கள் குழுவின் அதிகாரப் பூர்வத் தலைவராக செயல்படுவார்.
உலக வங்கிக் குழுமத்தின் தலைவராக இருந்த அமெரிக்க வங்கித் துறையாளர் டேவிட் மல்பாஸ் சமீபத்தில் பதவி விலகினார்.